Skip to main content

பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டம் ரத்து  

Published on 25/04/2022 | Edited on 25/04/2022

 

chennai high court lift goondas act on pubg madhan

 

பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், பெண்களை ஆபாசமாக சித்தரித்துப் பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பப்ஜி மதன் மீது  சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தருமபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, மதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

 

இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்