Published on 19/08/2022 | Edited on 19/08/2022
சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் என மாநகராட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை தினத்தைக் கொண்டாட ஆகஸ்ட் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து பெசன்ட் நகர் மற்றும் எலியட் சாலையில் மாலை 3.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் மற்றும் சிற்றுண்டி கடைகள் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் இயற்கை உர விற்பனை அங்காடிகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 22ம் தேதி சென்னையில் பல இடங்களில் மரக்கன்று நடும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளன.