பழனி பாலதண்டாயுதபாணி திருக்கோயில் அறங்காவலராக தேர்வு செய்யப்பட்ட பாலசுப்பிரமணி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பாலதண்டாயுதபாணி திருக்கோயில் அறங்காவலராக நியமனம் செய்யப்பட்ட ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார்சத்திரம் கதிரயன்குளத்தை சேர்ந்த கொம்பன் என்ற பாலசுப்பிரமணி அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கு சால்வை அணிவித்து காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். அப்போது உயர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது பொறுப்பை உணர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என வாழ்த்தினார். அதனைத் தொடர்ந்து அறங்காவலர் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட பாலசுப்பிரமணியத்திற்கு திமுக நிர்வாகிகள் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெல்லூர் மலைச்சாமி, முன்னால் கூட்டுறவு வங்கி தலைவர் சீனி மற்றும் கட்சி நிர்வாகிகள் சிலர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பழனி அறங்காவலர் பதவி வழங்கியது குறித்து பால சுப்பிரமணி கூறுகையில், '' முன்னால் ஒன்றியக்குழு உறுப்பினரான நான் கட்சியின் தீவிர விசுவாசியாக பணியாற்றியதால் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி எனக்கு இந்த பதவியை வழங்கியுள்ளார். என் உயிருள்ளவரை தலைவருக்கும் அமைச்சருக்கும் கட்சிக்கும் என்றும் விசுவாசியாக இருப்பேன். எங்கள் சமுதாய மக்கள் மனதார பாராட்டும் நன்றியும் தெரிவித்து வருகின்றனர்'' என்றார்.
நிகழ்ச்சியின் போது தலைமைச் செயற்குழு உறுப்பினர் நடராஜன், கிழக்கு மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, திண்டுக்கல் ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், அகரம் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் நந்தகோபால், திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர்கள் நெல்லை சுபாஷ் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.