செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அடாவடியை எதிர்த்து கடந்த மார்ச் 3ஆம் தேதி, காவல்நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
![Chengalpattu Police Inspector issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/Lyrmc64rQk6f-niubpA7d3EpmShMPcb8PSdDoclQPtQ/1583495711/sites/default/files/inline-images/111111_120.jpg)
திருப்போரூர் காவல்நிலையம் 1907ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான காவல்நிலைம். இது, மேலும் முருகபெருமானின் பிரசித்தி பெற்ற கந்தசாமி திருக்கோயில் அமைந்துள்ளதால், ஆண்டு முழுவதும் பக்தர்கள் நடமாட்டமும் அதிகம், கடந்த 1994ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா கட்டப்பட்டதில் இருந்தே அங்கு பதிவிவகிக்கும் காவல் ஆய்வாளர்கள் அலாட்டாகவே இருப்பார்கள்.
இந்தநிலையில் ஜெ மறைவுக்கு பின் கலையிழந்து காணப்பட்ட திருப்போரூர் காவல்நிலையதிற்கு புதியதாக பதிவியெற்ற ஆய்வாளர் ராஜேந்திரன் அளவில்லாத சேட்டை செய்ததால் ஊர்பொது மக்களே காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இவர் ரோந்து பணிக்கு செல்லும் போது யாராக இருந்தாலும் அமர்ந்திருக்க கூடாது. இவரை பார்த்தவுடன் பௌவ்வியமாக எழுந்து நிற்க வேண்டும். இல்லையென்றால் கன்னத்தில் பாளார் என்று அரை விழும். அதையும் மீறி எதிர்த்து கேட்டால் காவல்நிலையத்திற்க்கு அலேக்காக அள்ளிக்கொண்டு போய் தனி கவனிப்பு தான்.
அவர் வரும் போது ரோட்டில் மட்டும்மல்ல? சொந்த கடையில் கூட யாரும் அமர்ந்திருக்க கூடாது. அவர்களுக்கும் பாளார் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தநிலையில் கடந்த மார்ச் 3ஆம் தேதியென்று இரவு எட்டு மணியளவில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் காவல்துறை ஜீப்பில் ரோந்து வந்துக்கொண்டிருந்தார். அப்போது சன்னதி தெருவில் வந்துக்கொண்டிருந்த போது அவர் ஜீப் சாலையோரம் வந்துகொண்டிருந்த முனுசாமி என்ற 80 வயது முதியவர் மீது மோதியது. இதனால் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அதை கண்ட முரளி என்பவர் "இப்படி முதியவரை இடித்து தள்ளிவிட்டு கண்டுகொள்ளாமல் செல்கிறீர்களே... கவனமாக செல்லக்கூடாதா?" என்று கேட்க...
இதனால் ஆத்திரம் அடைந்த இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் முரளியை பிடித்து பொதுமக்கள் முன்னிலையிலேயே சரமாரியாக தாக்கினார். பின்னர் காவல்நிலையம் அழைத்து சென்றும் தாக்கியுள்ளார். இதனால் கோபம் அடைந்த ஊர் பொதுமக்கள் திருப்போரூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கேஷோமிட்டனர்.
பின்னர் காவலர்கள் வந்து சமாதானம் செய்து பொதுமக்களை அனுப்பி வைத்தனர். அந்த காவலரை பற்றி விசாரித்ததில் 1907ல் துவங்கப்பட்ட காவல்நிலையத்தில் பழமை வாய்ந்த கட்டிடத்தில் தான் காவல் ஆய்வாளர் அறை இருந்து வந்தது. ஆனால் இவர் இங்கு வந்த முதல் நாளே அதை மாற்றி புதிய கட்டிடத்தில் உள்ள கைதிகள் அறையை ஆய்வாளர் அறையாக மாற்றினார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை பற்றி அறிந்து கொள்வதற்காக இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம்.