வேலை வாங்கி தருவதாக மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் மற்றும் கரூர் திமுக வின் மாவட்ட பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி வீட்டில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
2011-15 கால கட்டத்தில் போக்குவரத்து அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.95 லட்சம் மோசடி செய்ததாக அவரது நண்பர் கணேஷ்குமார் மத்திய குற்றப்பிரிவில் புகார் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கில் செந்தில் பாலாஜி மீது அடிப்படை முகாந்திரம் இருப்பதால் ஏன் எதிர்கொள்ளக் கூடாது என்று கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில்பாலாஜி உள்ளிட்ட 3 பேர் மீது ஏமாற்றுதல், கொலை மிரட்டல், உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இருந்து செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றம் நிபர்ந்தனை முன்ஜாமீன் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக பிரபு தர்களுக்கு பாராட்டு விழாவும் மாநாடும் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் இன்று நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதுமிருந்து திமுக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டிருக்கும் நிலையில் இதை திசை திருப்பும் நோக்கத்தில் பத்து பேர் அடங்கிய மத்திய குற்றப்பிரிவு போலீசார் கரூர் செந்தில் பாலாஜி வீட்டில் இன்று அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். என்று குற்றம் சாட்டுகின்றனர் கரூர் மாவட்ட திமுகவினர். இந்த அதிரடி சோதனை கட்சியினரிடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் இருந்து 26 கி.மீ. தொலைவில் உள்ள ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில்பாலாஜியின் வீட்டில் சென்னை போலீஸ் விசாரணை வருகின்றனர். செந்தில் பாலாஜி வீட்டில் இல்லாததால் அவரின் தந்தை வேலுச்சாமி, தாய் பழனியம்மாள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செந்தில் பாலாஜி போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்த போது மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து டிஎஸ்பி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தகவலறிந்த செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அவரது வீடு முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.