Published on 22/10/2019 | Edited on 22/10/2019
வேலூர் மாவட்டம், வாலாஜபேட்டையில் உள்ள ஒரு இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்க தனி நபர் ஒருவரிடம் ஒப்பந்தம் செய்த நிறுவனம், அங்கு செல்போன் டவர் அமைப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளன. இது குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் 50- க்கும் மேற்பட்டோர் செல்போன் டவர் அமைய உள்ள இடத்திற்கு சென்று தனியார் தொடர்பு நிறுவனம் மேற்கொண்டு வந்த பணியை தடுத்து நிறுத்தினர்.
![CELLPHONE TOWER VELLORE PEOPLES AGAINST STRIKE](http://image.nakkheeran.in/cdn/farfuture/h9KY6KttpMr63e8Xeg7Fi39CreetOrnaUT-J0hT0o1c/1571737297/sites/default/files/inline-images/TOWER1333.jpg)
இது குறித்து மக்கள் கூறுகையில், செல்போன் டவர் அமைத்தால் எங்கள் பகுதியில் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். இதனால் பறவை, விலங்குகள் பாதிக்கப்படுவதோடு, நாங்களும், எங்களது குழந்தைகளும் பாதிக்கப்படும், அதனால் தான் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம் என்றனர்.