![THANJAVUR SCHOOL STUDENT CBI AND POLICE](http://image.nakkheeran.in/cdn/farfuture/hZUh4YezKF0sroitnT7tu6oZwwe_T6gb_NJ7yprr8JE/1644947536/sites/default/files/inline-images/CBI323.jpg)
தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் நான்கு பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றியதை உச்சநீதிமன்றமும் உறுதிச் செய்தது. இந்த நிலையில், மாணவி தற்கொலை தொடர்பாக, விடுதிக் காப்பாளர் சகாயம் மேரி மீது நான்கு பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. குழந்தையைத் தற்கொலைக்கு தூண்டுதல், குற்றம் செய்ய முயற்சித்தல் மற்றும் சிறார் நீதி சட்டப்பிரிவுகளான 75 மற்றும் 82 பிரிவுகளின் சி.பி.ஐ. முதல் தகவர் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது.
விடுதி காப்பாளர் சகாயம் மேரி மைதானம் உள்ளிட்டவையை சுத்தம் செய்ய வற்புறுத்தியதால் நஞ்சு அருந்தியதாக மாணவி தெரிவித்ததாக சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக, சென்னையைச் சேர்ந்த டி..எஸ்.பி. ரவி நியமிக்கப்பட்டுள்ளார். பிணையில் உள்ள விடுதி காப்பாளரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.