இந்திய நாடு முழுக்க ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு நாளிலும் போராட்டம் போராட்டம் என்றால் அது குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து நடைபெறும் போராட்டம் தான்.
ஒரு சாதாரண குக்கிராமங்கள் வரையில் போராட்டம் தொடர்ந்து வருகிறது. தமிழகத்தில் பிரதான எதிர்கட்சியான திமுக அதன் தோழமை கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் ஈரோட்டில் இன்று திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உட்பட பிரதான கட்சிகள் பல்வேறு தமிழ் அமைப்புகள் சமூக நிலையைக் இணைந்து பிரமாண்டமான பேரணியை நடத்தியது.
![Case against 10,000 people who fought against citizenship law](http://image.nakkheeran.in/cdn/farfuture/RbCueLEYiWME3pAN7AaQiVDnp8wMI-tLpMPWKKgCebE/1581097259/sites/default/files/inline-images/TRYUTYTYTYTYT.jpg)
இந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும், போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷமிட்டனர். சுமார் 10,000 பேர் வரை இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை என்று கூறியதோடு இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 1500 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
அத்துமீறி போராடினார்கள் என்று ஈரோடு காவல்துறை வழக்குபதிவு செய்துள்ளது மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து இந்தியா முழுக்க போராட்டம் வலுத்து வரும் நிலையில் இது ஜனநாயக ரீதியான போராட்டம் என்ற நிலையில் ஈரோட்டில் காவல்துறை அவர்கள் மீது பதிவு செய்துள்ள வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.