Skip to main content

கர்நாடகா இலாகா இழுபறி - டெல்லியில் பஞ்சாயத்து

Published on 28/05/2018 | Edited on 28/05/2018
rahul gandhi h.d. kumarasamy



கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியோடு மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரான குமாரசாமி முதல் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். துணை முதல் அமைச்சராக காங்கிரஸ் கட்சியின் பரமேஸ்வராவும், சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் ரமேஷ்குமாரும் பதவியேற்றுள்ளார்கள்.
 

கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல் அமைச்சர் பதவியோடு சேர்ந்து 24 அமைச்சர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு முதல் அமைச்சர் பதவியோடு சேர்ந்து 12 அமைச்சர்கள் என இருதரப்பும் பேசி முடிவு செய்தது. இந்த நிலையில் முதல் அமைச்சராக குமாரசாமி பொறுப்பேற்று 5 நாட்கள் ஆகியும் இன்னமும் அமைச்சகள் பதவியேற்கவில்லை. 
 

இதற்கு காரணம், இலாக்கா ஒதுக்கீட்டில் நடந்து வரும் இழுபறிதான். காங்கிரஸ் தரப்பு தங்களுக்கு நிதி மற்றும் காவல்துறை மேலும் பொதுப்பணித்துறை உள்பட முக்கிய துறைகளை தரவேண்டி கோருகிறது. ஆனால் குமாரசாமியோ, இதுவரை கர்நாடகா அமைச்சரவை பட்டியலில் முதல் அமைச்சரிடம் தான் நிதித்துறை இருந்துள்ளது. ஆகவே நிதித்துறையை தர இயலாது என்று கூறியதோடு, தங்களது கட்சியை சேர்ந்த 11 எம்எல்ஏக்களை அமைச்சர்களாக தேர்வு செய்திருக்கிறார். 
 

இதேபோல் காங்கிரஸ் கொடுத்த 23 பேர் கொண்ட அமைச்சர்கள் பட்டியலில் ஒரே மாவட்டத்தில் இரு அமைச்சர்கள் பதவிக்குவர வாய்ப்பு உள்ளது. கர்நாடகாவில் உள்ள அனைத்து மாட்டங்களுக்கும் ஒரு மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் என முன்னுரிமை கொடுத்துள்ளது. சில மாவட்டங்கள் அமைச்சர் பதவி இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது. 
 

இந்த முரண்பாடு இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சி கொஞ்சம் விட்டுக்கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் குமாரசாமி. ஆனால் கர்நாடக காங்கிரஸ் தலைமையோ, தாங்கள் கொடுத்த பட்டியலை மாற்ற முடியாது என்ற தெரிவிக்கிறது.
 

ஆக இந்த பஞ்சாயத்து பெங்களுருவில் தீர்க்க முடியாத நிலையில் இன்று டெல்லி சென்றுள்ளார் முதல்வர் குமாரசாமி. பிரச்சனையை சுமூகமாக பேசி முடியுங்கள் என காங்கிரஸ் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத் மற்றும் மல்லிகார்ஜுனகார்கேவிடம் கூறிவிட்டு, இன்று வெளிநாடு சென்றுவிட்டார் ராகுல்காந்தி. 
 

காங்கிரஸ் தரப்பு நடத்திய பேச்சுவார்த்தையில் முதல் அமைச்சர் குமாரசாமிக்கு நிதித்துறையை ஒதுக்க ஒப்புக்கொண்டது. மற்றப்படி அமைச்சரவைப் பட்டியல் ராகுல் காந்தி டெல்லி திரும்பியவுடன் அறிவிக்கப்படும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

சார்ந்த செய்திகள்