திண்டுக்கல் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பூங்கொடி ஐ.ஏ.எஸ். பதவி ஏற்று கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த விசாகன், தமிழ்நாடு மாநில மார்க்கெட்டிங் (டாஸ்மாக்) கழகத்தின் மேலாண்மை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சேலம் கூட்டுறவு ஜவ்வரிசி உற்பத்தி மையத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்த பூங்கொடியை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக பணியிடமாற்றம் செய்யது தமிழக அரசு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து இன்று காலை திண்டுக்கல் மாவட்டத்தின் 28வது ஆட்சியராக பூங்கொடி ஐ.ஏ.எஸ். பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய திண்டுக்கல் மாவட்டத்திற்கு இதுவரை பூங்கொடி ஐ.ஏ.எஸ்.ஸுடன் சேர்த்து 28 ஆட்சியர்கள் இருந்திருக்கின்றனர். இதில், வாசவி, அமுதா, விஜயலட்சுமி ஆகிய மூன்று நபர்களே பெண் ஆட்சியர்களாக இருந்தனர். தற்போது பூங்கொடி ஐ.ஏ.எஸ். திண்டுக்கல் ஆட்சியராக பொறுப்பேற்றதில் இருந்து அவர் திண்டுக்கல்லுக்கு ஆட்சியரான நான்காவது பெண் ஆட்சியர் எனும் சிறப்பை பெற்றுள்ளார்.