![Cannabis Sale- Complaint Numbers Notice!](http://image.nakkheeran.in/cdn/farfuture/cYKGhRD634hiPujPhdwfFo5zJQLGhKu99Pfi87058MM/1661600393/sites/default/files/inline-images/n798.jpg)
கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனை என்பது அதிகரித்துவரும் நிலையில், அதை தடுப்பதற்கு காவல்துறை சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்மையில், தமிழ்நாடு டிஜிபி உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் ஆப்ரேசன் கஞ்சா என்ற பெயரில் திட்டத்தை அறிவித்து தொடர்ந்து கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது தமிழக காவல்துறை.
பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு அருகே போதை பொருட்கள் விற்பனையை ஒழிக்கவும், பார்சல் மூலம் போதைப் பொருட்கள், போதை மாத்திரைகளை விற்பனை செய்பவர்களை தனிப்படை அமைத்து பிடிக்கவும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு பள்ளி சிறுவர்கள் சீருடையுடன் மது வாங்கி புத்தகப்பையில் வைத்துக்கொண்டு செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு அருகே கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை நடைபெற்றால் அதுகுறித்து புகாரளிக்க தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. புகாரளிப்பவர்கள் தங்களது விவரங்களை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை- 9498181206, விருதுநகர்-94439675739, திண்டுக்கல்-8225852544, தேனி-9344014104, ராமநாதபுரம்-8300031100, சிவகங்கை-8608600100, நெல்லை-9952740740, தென்காசி-9385678039, தூத்துக்குடி-9514144100, கன்னியாகுமரி-7010363173 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு புகாரளிக்கலாம்.