தமிழகத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி என, ஒன்பது மாவட்டங்களுக்கு, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.
இதற்காக, வார்டுகள் வரையறை உள்ளிட்ட பணிகளை முறையாக செய்யவும், மூன்று மாதங்களில் தேர்தல் நடத்தவும், கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு, இன்னும் இரண்டு மாதம் மட்டுமே அவகாசம் உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் தேர்தல் ஆணையம் தயார் செய்து வருகிறது.
இதற்கிடையில் இந்த 9 மாவட்டங்களோடு சேர்த்து பேரூராட்சி, நகராட்சிக்கான தேர்தலை நடத்திட வேண்டும் என்று ஆளும் கட்சி முடிவு செய்து உள்ளது. இதற்காக முன்கூட்டியே அதிமுக தலைமை பொங்கள் விடுமுறைக்கு சென்ற மா.செ. மற்றும் அமைச்சர்களிடம் அடுத்து வரப்போகும் நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலுக்கான வார்டு கவுன்சிலருக்கான வேட்பாளர் பட்டியல்களை தயார் செய்து கொடுக்க சொல்லி உத்தரவு போட்டுள்ளது.
பொங்கல் விழா கொண்டாட சொந்தவூருக்கு வந்த அதிமுக முக்கிய நிர்வாகிகள் வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்யும் பணியில் முழுவீச்சில் செயல்பட்டு முதல் ரவுண்ட் பட்டியலை தயார் செய்து தலைமைக்கு கொடுத்திருக்கிறார்கள்.
கட்சியின் தலைமையும் பட்டியலை பார்த்து இதில் சில இடங்கள் கூட்டணிக்கு ஒதுக்க வேண்டியிருக்கும். அதிலும் குறிப்பாக இந்தமுறை போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் சொந்த செலவில்தான் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அதானல் இந்த பட்டியில் 50 எல் முதல் 1 சி வரை செலவு செய்யும் வேட்பாளர்கள் யார் என்பதை குறித்து அவர்களுக்கு மட்டும் வாய்ப்பு கொடுங்கள் என்று உத்தரவு போட்டு பட்டியலை தயார் செய்து கொண்டிருக்கிறார்கள் ஆளும் கட்சியினர்.