![Bribery in government offices! Virudhunagar caught in Diwali raid!](http://image.nakkheeran.in/cdn/farfuture/z_CErIXfx9n0MsSWRh2TV3YqAmjKDFDJMfgc_X6kNOE/1665811380/sites/default/files/inline-images/th_3340.jpg)
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாக முதல் தளத்தில் உதவி இயக்குநர் பஞ்சாயத்து அலுவலகம் இருக்கிறது. இங்கே உதவி இயக்குநராக உமாசங்கர் பணிபுரிகிறார். விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையில் இந்த அலுவலகத்தில் சோதனை நடந்தது. அப்போது, அந்த அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.6 லட்சத்து 68 ஆயிரம் பிடிபட்டது. லஞ்சப் பணத்தைக் கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தினர்.
தீபாவளி நெருங்கும் நேரத்தில் லஞ்சப் பணம் சிக்கியதால், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பானது. இதே அலுவலகத்தில், 2019-ல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்தது. அப்போது இருந்த உதவி இயக்குநரிடம் இருந்தும், ஓட்டுநரிடம் இருந்தும் லஞ்சப் பணம் பிடிபட்டது. அரசு அலுவலகங்களில் பணிபுரிவோர் பலரிடமும் லஞ்சம் வாங்கும் குணம் மாறவே மாறாததாக இருக்கிறது.