Skip to main content

பழுதடைந்த வேன் மீது சொகுசுப் பேருந்து மோதி மூன்று பேர் பலி

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

 

தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா சிவகிரியில் இருந்த தென்காசி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அருளாட்சி மெயின் சாலைக்கும் உள்ளார் நடுவில் உள்ள தனியார் கடைக்கு அருகே வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்று விட்டு, திரும்பி பின்பு மதுரையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி ஆம்னி வேனில் சென்றவர்கள் இன்று காலை 4 மணி அளவில் நிலைதடுமாறி மோதியதில் ஆம்னி பழுதாகி நின்றது. அவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. 


 

அதிலிருந்து அவர்களை மாற்று வண்டியில் ஏற்றி அனுப்பி விட்டு, ஆம்னி வேன் டிரைவர் மற்றும் இருவர் மட்டும் பழுதடைந்த ஆம்னி காரை சரி செய்வதற்காக விபத்து ரெக்கவரி வாகனத்தில் ஏற்றிவிட்டு செல்வதற்கு தயாராக இருந்த நிலையில் எதிர்பாராத வேளையில் சென்னையிலிருந்து செங்கோட்டை நோக்கி திரும்பிக்கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து திடீரென மோதியதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர்கள் பரிதாபமாக உடல் நசுங்கி பலியானார்கள் ஒருவருக்கு தலையில் பலத்த அடியும் மற்றொருவருக்கு உடம்பு முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 


 

இதுகுறித்து வாசுதேவநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து அவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் போலீஸார் விசாரணையில் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பும் போது ஆம்னி வேன் பழுதாகி நின்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது பலியானவர்கள் குறித்து முதல் தகவல் அறிக்கையில், ஆம்னி கார் ரெக்கவரி வேன் டிரைவர் சிவகாசியைச் சேர்ந்த ராஜசேகர், மற்றும் இரண்டு பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

சார்ந்த செய்திகள்