Skip to main content

நீட் தேர்வு பயத்தில் பிளஸ்-2 மாணவி தற்கொலை! 

Published on 01/05/2018 | Edited on 02/05/2018
sucide

 

புதுச்சேரி அரும்பார்த்தபுரம் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் சிவசங்கரன் (வயது42). இவருடைய மனைவி சுசிலா.  இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சிவசங்கரன் வில்லியனூர் கோட்டைமேடு பகுதியில் டீ. மற்றும் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவியும் கடையில் கணவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.

 

இவர்களுடைய மூத்த மகள் சிவசங்கிரி (வயது17). பிளஸ்- தேர்வு எழுதி முடித்து விட்டு நீட் தேர்வுக்கு படித்து வந்தார். மாணவி சிவசங்கரி டாக்டர் ஆக வேண்டும் என்று எல்லோரிடமும் கூறி வந்த நிலையில் மாணவிக்கு திடீர் உடல் நலம் பாதிக்கப்பட்டது.

 

இந்த நிலையில்  சிவசங்கரி தனது தங்கையுடன் நீட் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தார். திடீரென சிவசங்கரி நான் அறையில் சென்று படிக்கிறேன் என்று தங்கையிடம் கூறிவிட்டு அறைக்கு சென்று பூட்டிக் கொண்டார். வெகு நேரமாக கதவை தட்டியும் சிவசங்கரி கதவை திறக்காமல் இருப்பதை அறிந்த தங்கை தந்தை சிவசங்கரனுக்கு தகவல் தெரிவித்தார்.

 

உடனே வீட்டுக்கு வந்த சிவசங்கரன் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சிவசங்கரி பேன் கொக்கியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கினார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிவசங்கரன் மகள் சிவசங்கரியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிவசங்கரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

 

இதுகுறித்த தகவல் அறிந்த ரெட்டியார்பாளையம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

நீட் தேர்வுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தேர்வுக்கு பயந்து மாணவி சிவசங்கரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

சார்ந்த செய்திகள்