Skip to main content

பள்ளிக்கு செல்வதாக கூறிச்சென்ற மாணவன்; வீட்டில் சடலமாக மீட்பு

Published on 15/10/2022 | Edited on 15/10/2022

 

a boy pased away; police investing

 

கடையநல்லூர் அருகே 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

தென்காசி மாவட்டம் சேர்ந்தபுரம் பகுதியில் உள்ள அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு இரண்டு மகன்கள். இவரது இரண்டாவது மகன் அப்பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளிக்கு செல்வதாக மகன்கள் கூறிச்செல்ல, பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். இதனிடையே காலை 11 மணியளவில் வீட்டின் கதவு திறந்து இருக்கிறது என அக்கம்பக்கத்தினர் பார்த்த பொழுது மின்விசிறியில் தூக்கிட்டு மாணவன் இறந்துள்ளார்.

 

இதனை அடுத்து அப்பகுதி மக்கள் உடனே காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு  வந்த காவல்துறையினர் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேர்ந்தமரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் ஆய்வு செய்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்