Published on 23/09/2020 | Edited on 23/09/2020
![bjp tamilnadu president l murugan after meet the governor press meet](http://image.nakkheeran.in/cdn/farfuture/r3t6yBKYGk_FYTgJnfAnjwdtIQkarWSmokqcFHOSAYE/1600860361/sites/default/files/inline-images/m1%20%283%29.jpg)
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து எல்.முருகன் பேசியதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், ஆளுநருடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த எல்.முருகன், "இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. ஆளுநரின் உடல்நிலையை விசாரித்தேன். சசிகலாவை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்க பா.ஜ.க மத்தியஸ்தம் செய்யவில்லை" என்றார்.