Published on 22/08/2022 | Edited on 22/08/2022
![Arjunamurthy rejoins BJP!](http://image.nakkheeran.in/cdn/farfuture/4tKPUQpnmjKXIrzxGsDTZaXmvm1N2uZSqnb4lnhbXjc/1661147269/sites/default/files/inline-images/arjun_9.jpg)
இந்திய மக்கள் முன்னேற்ற கட்சித் தலைவரான அர்ஜுனமூர்த்தி இன்று (22/08/2022) மீண்டும் பா.ஜ.க.வில் இணைகிறார்.
சென்னை தியாகராயர் நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநில அலுவலகமான கமலாலயத்தில் இன்று (22/08/2022) மதியம் 01.00 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அர்ஜுனமூர்த்தி தன்னை மீண்டும் பா.ஜ.க.வில் இணைத்துக் கொள்கிறார்.
பா.ஜ.க.வின் முன்னாள் மாநில அறிவுசார் பிரிவுத் தலைவர் அர்ஜுனமூர்த்தி நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.