பிரபல தனியார் மருத்துவக்கல்லூரி பெண் உதவிபேராசிரியர் தன்னை கல்லூரிவளாகத்துக்குள் அடைத்துவைத்து உணவுகூட கொடுக்காமல் கொடுமைப்படுத்துகிறார்கள். பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபடுகிறார்கள் என்று பயந்து நடுங்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. ஊடகங்களில் பரவியதாலும் அவர், காவல்துறைக்கு அனுப்பிய புகாரின் அடிப்படையிலும் மாமல்லபுரம் ஏ.எஸ்.பி. பத்ரி நாராயணன் ஐ.பி.எஸ். கல்லூரி வளாகத்துக்கு வந்து உதவி பேராசிரியர் பபிலாவை மீட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துவருகிறார். ஏ.எஸ்.பி. பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் உணவு கொடுக்கப்பட்டுவருகிறது.

ஆனால், பிரபல கல்லூரி நிர்வாகமோ "அந்த உதவி பேராசியர் கல்லூரிக்கு சரியாக வரவில்லை என்பதாலும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாலும் பணியிலிருந்து நீக்கிவிட்டோம். ஆனால், கல்லூரி வாளாகத்திலுள்ள தங்கு விடுதியை விட்டு வெளியேற மறுக்கிறார். அவர், மன அழுத்தத்தில் உள்ளார். அவரது, குற்றச்சாட்டுகள் பொய்யானவை" என்கிறது. மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளும் தொண்டு நிறுவங்களும் காவல்துறையும் இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றன.