Skip to main content

ஐ.பி.எல். 2025 : மெட்ரோ ரயிலில் இலவச பயணம்!

Published on 21/03/2025 | Edited on 21/03/2025

 

IPL 2025: Free travel on chennai Metro

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டுக்கான 18வது சீசன் நாளை (22.03.2025) முதல் மே மாதம் வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான மெகா ஏலம், கடந்தாண்டு நவம்பர் மாதம் சவுதி அரேபியாவில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியின் அட்டவணை வெளியிடப்பட்டது. இந்த சீசனில் 13 மைதானங்களில் 74 போட்டிகள் நடைபெற உள்ளது.

நாளை நடைபெறும் முதல் போட்டியில், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. அதனைத் தொடர்ந்து, நாளை மறுநாள் (23.03.2025) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணி ஆகிய அணிகள் ஹைதராபாத்தில் மோதவிருக்கிறது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள், சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் மோதுகின்றன. மார்ச் 23, 28, 30, ஏப்ரல் 5, 8, 11, 14, 20, 25, 30 மற்றும் மே 3, 7, 12, 16 ஆகிய தேதிகளின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடவிருக்கிறது.

முதல் குவாலிஃபயர் போட்டி, மே 20 அன்றும், எலிமினேட்டர் போட்டி மே 21 அன்றும் ஐதராபாத்தில் நடைபெறுகிறது. 2ஆம் குவாலிஃபர் போட்டி மே 23ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்த சீசனின் இறுதிப்போட்டி கொல்கத்தாவில் மே 25ஆம் தேதி நடைபெற உள்ளது. முதல் குவாலிஃபயர் போட்டி, மே 20 அன்றும், எலிமினேட்டர் போட்டி மே 21 அன்றும் ஐதராபாத்தில் நடைபெறுகிறது. 2ஆம் குவாலிஃபர் போட்டி மே 23ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்த சீசனின் இறுதிப்போட்டி கொல்கத்தாவில் மே 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஐ.பி.எல். போட்டியை காண செல்பவர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “ சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வருகின்ற மார்ச் 23, 2025ஆம் தேதி நடைபெறஉள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு தடையற்ற மெட்ரோ பயணத்தை வழங்க ஸ்பான்சர் செய்ய முன்வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்துசெயல்படுவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.

IPL 2025: Free travel on chennai Metro

ஸ்பான்சர் செய்யப்பட்ட ஐ.பி.எல். போட்டிகான பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் பயணச்சீட்டுகளில் உள்ள தனித்துவமான விரைவு (QR) குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம். எந்த மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ இரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.

​அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கடைசி மெட்ரோ ரயில் நள்ளிரவு 1 மணிக்கு விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையம் மெட்ரோ நோக்கி புறப்படும். பயணிகள் கடைசி மெட்ரோ ரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ  ரயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் (நடைமேடைகள் 1 மற்றும் 2) வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம். ஐ.பி.எல். போட்டியை காண செல்பவர்கள்  இந்த வசதிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்