![kiran bedi](http://image.nakkheeran.in/cdn/farfuture/D6oEKZFPN3Zltq7SJryguj42ephZYwgF9evx6-hT318/1548353020/sites/default/files/inline-images/kiran%20bedi%20555.jpg)
புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக உள்ள கிரண்பேடி ஆந்திர மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வதந்தி பரவி கொண்டிருக்கிறது. மேலும் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட உள்ளதாகவும் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன
இந்நிலையில் ஆதிதிராவிட நலத்துறையில் இன்று ஆய்வு மேற்கொண்ட கிரண்பேடியிடம் மேற்கண்ட செய்திகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த கிரண்பேடி, "ஆந்திர மாநிலத்தின் ஆளுநராக நான் நியமிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஓராண்டாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. இது வதந்தியாக இருக்கலாம் என்றார். மேலும் "வரும் பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, இனி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். நான் எப்போதும் ஒரு நிர்வாகியாகவே செயல்பட விரும்புகிறேன். நான் அரசியல்வாதியுமில்லை, தேர்தலில் யாருடனும் மோதவும் விரும்பவில்லை" என தெரிவித்தார்.