Published on 13/01/2021 | Edited on 13/01/2021
தமிழகத்தில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள், 2 இடங்களில் தொல்லியல் கள ஆய்வுகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, கீழடி (சிவகங்கை), ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை (தூத்துக்குடி), கொடுமணல் (ஈரோடு), மயிலாடும்பாறை (கிருஷ்ணகிரி), கங்கை கொண்ட சோழபுரம், மாளிகைமேடு (அரியலூர்) உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் வரலாற்றை உலக அரங்கில் நிலைநிறுத்த அகழாய்வு பேருதவியாக அமையும் என்று தமிழக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.