Published on 10/08/2021 | Edited on 10/08/2021
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை செய்துவருகிறார்கள். சுமார் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், கோவை குனியமுத்துரில் உள்ள அவரது வீட்டில் சோதனையில் ஈடுபட்டுவருகிறார்கள். மேலும், அவரது சகோதரர் வீட்டிலும் சென்னை, காஞ்சிபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அவருக்கு நெருக்கமானவர்களின் 15 வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது.
நேற்று (09.08.2021) வேலுமணி மீது பண மோசடி புகார் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இந்த சோதனை நடைபெறுகிறது. முன்னதாக, கடந்த ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டிலும் அவருக்கு தொடர்புடையவர்கள் வீட்டிலும் சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.