Published on 23/09/2020 | Edited on 23/09/2020

அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக்கூடாது என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு, பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், 'அண்ணா பெயரை மாற்றினால் பல்கலைக்கழகத்தின் தரம் பறிபோய்விடும். முன்னணி நிறுவனங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் செய்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கேள்வி குறியாகும். மாணவர்களின் சான்றிதழ் செல்லாமல் போவதுடன் ஐ.ஒ.இ. அந்தஸ்தும் கைநழுவிச்செல்லும். பெயரை மாற்றக்கூடாது என அரசுக்கு வலியுறுத்தி மசோதாவில் திருத்தும் செய்ய உத்தரவிட வேண்டும்' என கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.