Skip to main content

திருப்பதி வரும் தமிழனை விரட்டியடிக்கனும் – ஆந்திரா சாமியாரின் பேச்சால் ஆத்திரமான போலீஸ்!!

Published on 30/01/2019 | Edited on 30/01/2019

திருவண்ணாமலை நகரம் கிரிவலப்பாதையில் உள்ள ரமணாஸ்ரமம் எதிரே ஆந்திரா ஆஸ்ரமம் அருகில் கடந்த 23ந்தேதி முதல் ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த பொக்குல கொண்ட கைாயஸ்ரமபீடாதிபதி யோகீஸ்வரர் சுவாமி என்பவர் நிர்வாண பூஜை நடத்திவந்துள்ளார்.

 

a

 

இந்த தகவல் பரவி கடந்த இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பத்திரிக்கைகளில் செய்தியாக வெளியாக சென்னை தலைமை செயலாகத்தில் இருந்து மாவட்ட நிர்வாகத்திடம் கேள்விகள் எழுப்ப சம்மந்தப்பட்ட இடத்துக்கு இன்று ஜனவரி 30ந்தேதி காலை 11 மணிக்கு வந்த வருவாய்த்துறை கோட்டாச்சியர், தாசில்தார், நகர காவல் ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையிலான போலிஸ் படை நிர்வாண பூஜை நடத்தக்கூடாது, உடனே அதனை நிறுத்தாவிட்டால் கைது செய்வோம் என எச்சரித்தனர்.

 

 

இதுக்குறித்து அந்த நிர்வாண சாமியாரின் தலைமை சீடர் ரவி என்பவர், நாங்க சென்னையில் இருந்து ஒரு டெபுடி டைரைக்டர் ஒருத்தர் கலெக்டருக்கு தகவல் சொல்லிட்டு தான் பூஜை செய்யறோம், கலெக்டரோட தினமும் பேசிக்கிட்டு தான் இருக்கோம் என தெலுங்கில் போலிஸாருடன் வாக்குவாதம் செய்தார். அதோடு, போலிஸ் யார் எங்களை வந்து கேள்வி கேட்க, நிர்வாண பூஜை நடத்தக்கூடாதுன்னு சொல்றதுக்கு நீ யார் என தெலுங்கில் சரமாரியாக பேசியவரிடம், நிர்வாண பூஜை என்பதைக்கேட்டு மக்கள் முகம் சுளிக்கறாங்க, சாதாரண பூஜையை நாங்கள் தடுக்கப்போவதில்லை என எடுத்துச்சொல்லியும் அவர்கள் கேட்காமல் தகராறு செய்தனர். அதோடு, திருப்பதிக்கு வர்ற தமிழ்நாட்டுக்காரனை அடிச்சி துரத்தனால், எங்க மேல ஒரு பயம் வரும் எனப்பேச அங்கிருந்த போலிஸாருக்கு சுரீர்ரென கோபம் வந்துவிட்டது.

 

 

தமிழ்நாட்டுக்காரன் வரலன்னா, திருப்பதியில ஒன்னும்மேயில்ல தெரிஞ்சிக்க என சூடாக பதில் தந்தவர்கள், சாமியார்ங்கறதால மரியாதையா பேசறோம், இல்லைன்னா ஸ்டேஷனுக்கு தூக்கிம்போய்டுவோம், ஒழுங்க கிளம்பி போங்க என எச்சரித்தனர். அவர்கள் இந்து முன்னணியை துணைக்கு அழைத்தனர். அதன் நிர்வாகிகளான அருண், சதிஷ் போன்றோர் வந்து, மற்ற மதத்தினர் கூட்டம் போட்டா பல்லை காட்டறிங்க என பேசினர். வீணா எதுக்கு பிரச்சனையை திசை திருப்புகிறீர்கள், காலி செய்யுங்க என 2 மணி நேர வாக்குவாதத்துக்கு பின் சாமியார் ஒருக்காரில் ஏறி கிளம்பி சென்றார்.

 

இதேசாமியார், கடந்த ஆண்டு கிரிவலப்பாதையில் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தில் இதேப்போல் நிர்வாணமாக அமர்ந்து யாகம் நடத்தினர். அப்போது பெரும் பிரச்சனையாக மாவட்ட நீதிபதியாக இருந்த மகிழேந்தி நேரடியாக வந்து பூஜையை நிறுத்தி வெளியேற்றினார். ஓராண்டுக்கு பின் மீண்டும் வந்து யாகம் நடத்தியதை மக்களின் எதிர்ப்பால் தற்போது விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்