Skip to main content

அரசு அதிகாரியை மிரட்டி பணம் பறிப்பு; 2 பெண்கள் உட்பட மூவர் கைது!

Published on 04/03/2025 | Edited on 04/03/2025

 

3 people arrested for black mailing and extorting money from a govt official

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த நிக்லஸ் மனைவி செல்வி என்கிற சூசையம்மாள். இவர் ‌சன் லைட் ஹோம் கேர் என்ற ‌ நிறுவனம் நடத்தி வருகிறார். இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் மூகண்டஹள்ளி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் மனைவி நளினி வேலைக்குச் சேர்ந்துள்ளார். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை ரோடு பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன். இவர் திருப்பத்தூர் தலைமை அஞ்சலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்ட காரணத்தால் அவரை பராமரிக்க சன் லைட் ஹோம் கேர் மூலம் நளினியைத் திருப்பத்தூருக்கு வேலைக்கு வர வைத்துள்ளார்.

அப்போது மாதேஸ்வரனுக்கும் நளினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட நளினி, மாதேஸ்வரன் நிர்வாணமாக இருக்கும் வீடியோவை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து செல்விக்கு அனுப்பி உள்ளார். அதன் பின்பு அந்த வீடியோவை செல்வி, மாதேஸ்ரனுக்கு அனுப்பி 5 லட்சம்  பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பயந்து போன மாதேஸ்வரன் 2 லட்சத்து  30 ஆயிரம் ரூபாயைக் கொடுத்ததாகத் தெரிகிறது. பின்னர் மீதி பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் செல்வி தொலைப்பேசியில் அழைத்தால் அதனை மாதேஸ்வரன் தவிர்த்ததாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த செல்வி அதன் வீடியோவை தனது நிறுவனத்தில் வேலை செய்யும் ஆம்பூர் பகுதியை விமல்ராஜிக்கு அனுப்பி அவரிடம் பணம் கேட்கும்படி கூறியதன் காரணமாக விமல்ராஜ் மாதேஸ்வரனுடைய வீட்டிற்கு சென்று பணம் கேட்டு உள்ளார். இதனால் பயந்துபோன மாதேஸ்வரன் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் செல்வி, நளினி மற்றும் விமல்ராஜ் ஆகிய  மூவர் மீது வழக்குப் பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்‌‌. தனியார் ஏஜென்சி மூலம் வீட்டு வேலைக்குச் சேர்ந்து அரசு அதிகாரி நிர்வாணமாக வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டி சம்பவம் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சார்ந்த செய்திகள்