17-வது மக்களவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக நடைப்பெறுகிறது. இந்நிலையில் முதற்கட்ட மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைப்பெற உள்ளது. மேலும் இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைப்பெற உள்ளது. இதனை தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் தற்போது தொடங்கி நடைப்பெற்று வருகிறது. மேலும் பிரச்சார களம் சூடுப்பிடித்துள்ள நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் . இது வரை மக்களவை தேர்தல் அறிக்கையை வெளியீடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சி தலைவர்களும் எவ்வாறு பிரச்சாரம் செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
கடந்த மக்களவை தேர்தலை காட்டிலும் இந்த தேர்தல் சற்று மந்த நிலையே காணப்படுகிறது. இதற்கு காரணம் கூட்டணி பேச்சுவார்த்தையில் தொய்வு மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தல் தேதியை சற்று கால தாமதமாக அறிவித்ததே என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் தேசிய கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியீட ஏன் இவ்வளவு கால தாமதம் என்ற கேள்வியை அனைவரும் எழுப்புகின்றனர்? மாநில கட்சிகளின் தேர்தல் அறிக்கையை வெளியீட்ட பின்பு தேசிய கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியீட விருப்பமா என்ற கேள்வியும் எழுகிறது? வேட்பாளர்கள் தொகுதிக்கு சென்று பிரச்சாரம் செய்ய ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் தேசிய கட்சிகளின் தேர்தல் அறிக்கை அறிவிக்காதது. அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பி.சந்தோஷ் , சேலம்