
எடப்பாடி அரசு மூலம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் எங்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என ஐகோட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அதன் அடிப்படையில் இரண்டு நீதிபதிகளான முன்னாள் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் கொண்ட பெஞ்ச் தகுதிநீக்கம் செல்லும், செல்லாது என மாறுபட்ட கருத்துக்களை கடந்த மாதம் தெரிவித்ததின் பேரில் மூன்றாவது நீதிபதி தீர்ப்புக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் தான் கடந்த 25 ம்தேதி மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் இறுதி தீர்ப்பு வழங்கினார். அதில் 18எம்.எல் ஏ.கள் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்திவுயிட்டது செல்லும் என அதிரடி தீர்ப்பு வழங்கினார்.
இந்த தீர்ப்பை கேள்வி பட்டவுடனே டிடிவியும் அவரது ஆதரவு எம்எல்ஏ கள் 18 பேரும் அதிர்ச்சியடைந்து விட்டனர்.
. ஆனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருக்க கூடிய இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன், கட்சி தொண்டர்களும் அங்கங்கே ஒன்று கூடி வெடி வெடித்தும் இனிப்புகளை பொதுமக்களுக்கு கொடுத்தும் சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கினார்கள்.
அது போல் தான் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொறுப்பில் இருக்க கூடிய ர.ர.க்கள் அங்கங்கே வடிவெடுத்து கொண்டாடினார்கள்.
திண்டுக்கல் மாநகரில் உள்ள வனத்துறை அமைச்சர் சீனிவாசனின் மகன் ராஜ்மோகன் தலைமையிலான பொறுப்பாளர்கள் எம்.ஜி ஆர்.சிலை அருகே வெடிவெடித்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தியதுடன் மட்டுமல்லாமல் பொது மக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்கள். அதோடு அமைச்சர் சீனிவாசனின் தீவிர ஆதரவாளர்களான மாவட்ட ஜெ. பேரவை துனண செயலாளர் சோனா சுருளிவேல் மற்றும் மாவட்ட எம்ஜிஆர் அணி பொறுப்பாளருமான சபரிதாதன் ஆகியோர் இந்த 18எம்.எல் ஏ.களின் தீர்ப்புக்கு பாராட்டி ஜெ. ஆசியுடன் நீதி வென்றது என்ற வார்த்தையுடன் ’இந்தியாவின் இரண்டாவது இரு இரும்பு மனிதர்கள் இபிஎஸ். ஒபிஎஸ்’ என முதல்வரையும், துணை முதல்வரையும் பாராட்டி மெகா சைஸ் போஸ்டர்கள் அடித்து மாவட்டத்தில் உள்ள பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை நத்தம், வேடசெந்தூர், திண்டுக்கல் உள்பட ஏழு தொகுதிகளிலும் இபிஎஸ்சையும், ஒபிஎஸ்சையும் வாழ்த்தி ஒட்டி இருப்பது கட்சிகாரர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதை கண்டு கட்சியில் உள்ள மற்ற சார்பு அணி பொறுப்பாளர்களும் இந்தியாவின் இரண்டாவது இரு இரும்பு மனிதர்களான இபிஎஸ், ஒபிஎஸ்சை வாழ்த்தி போஸ்டர் அடிக்க தயாராகி வருகிறார்கள்.