Skip to main content

உயர்கல்வி அமைச்சர் மற்றும் குடும்பத்தினரின் டெண்டர் ராஜ்யம் குறித்து விசாரணை தேவை! அன்புமணி

Published on 02/12/2018 | Edited on 02/12/2018
a


பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை: ’’உயர்கல்வித்துறை வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த வேண்டிய அத்துறை அமைச்சரும், அவரது குடும்பத்தினரும் தருமபுரி மாவட்டத்தின் குறுநில மன்னர்களாக மாறி ஆட்சி நடத்துவது குறித்தும், அரசுத்துறை ஒப்பந்தங்களை மிரட்டிப் பறிப்பது குறித்தும் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. இத்தகைய அத்துமீறல்களைத் தடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகமும், மற்ற அதிகாரிகளும் அமைச்சருக்கு ஆதரவாக செயல்பட்டு ஒப்பந்தப் பணிகளை தடுத்து நிறுத்தியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

 

தருமபுரி மாவட்டத்தில் அரசுத்துறை கட்டிடங்களைக் கட்டுதல், நெடுஞ்சாலைகள் அமைத்தல், நீர்நிலைகளைத் தூர் வாருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தங்கள் அனைத்தையும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது குடும்பத்தினர் மற்றும் பினாமிகள் பெயரில் கைப்பற்றி, அரசு நிதியை கொள்ளையடித்து வருவது குறித்தும் ஏற்கனவே பலமுறை புள்ளி விவரங்களுடன் குற்றஞ்சாட்டியிருக்கிறேன். அவை அனைத்தையும் விஞ்சுவதைப் போல இப்போது அமைச்சர் மீது புதிய குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

 

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ. 2 கோடி செலவில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகம் கட்ட தீர்மானிக்கப்பட்டு, அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் திருச்சியில்  உள்ள பொதுப்பணித் துறையின் மருத்துவப் பணிகள் பிரிவுக்கான கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் கோரப்பட்டன. மொத்தம் ரூ.1.66 கோடி மதிப்புள்ள சிவில் பணிகளை ரூ.1.58 கோடியில் நிறைவேற்ற தருமபுரியைச் சேர்ந்த கிருட்டிணன் என்ற ஒப்பந்தக்காரர் முன்வந்திருந்ததால் அவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இப்பணிக்கான பூமி பூஜை கடந்த 09.06.2018 அன்று அமைச்சர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் மலர்விழி மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்பட்டு, ஜூலை மாதத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

 

அதன்பின் தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேளாண் பொறியியல் சார்ந்த பணிக்கான ஒப்பந்தப்புள்ளிகள் சென்னையில் உள்ள வேளாண்துறை அலுவலகத்தில் கோரப்பட்டன. அதற்காக தருமபுரி ஒப்பந்ததாரர் கிருட்டிணன், அமைச்சர் அன்பழகனின் மைத்துனர் ஏ.செந்தில்குமார், அமைச்சருக்கு நெருக்கமான அதிமுக நிர்வாகி ஒருவர் ஆகியோர் ஒப்பந்தப்புள்ளிகளை தாக்கல் செய்திருந்தனர். கிருட்டிணன் போட்டியிலிருந்து விலகி விட்டால் அதிக தொகைக்கு ஒப்பந்தத்தை எடுத்து லாபம் பார்க்கலாம் என அமைச்சரின் மைத்துனர் திட்டமிட்டதாகவும், அதற்காக ஒப்பந்தப்புள்ளியைத் திரும்பப் பெறும்படி அவரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

 

 ஆனால், அந்த மிரட்டலுக்கு தாம் பணியாததால் ஆத்திமடைந்த செந்தில், ‘‘தருமபுரியில் நாங்கள் தான் அரசாங்கம். எங்களை எவனும் கேள்வி கேட்க முடியாது. இந்த ஒப்பந்தப்புள்ளியை திரும்பப் பெறாவிட்டால் தமிழகத்தில் எந்த மூலையிலும் ஒப்பந்தப் பணிகளை  மேற்கொள்ள முடியாது’’ என்று  மிரட்டியதாக ஒப்பந்ததாரர் கிருட்டிணனே குற்றஞ்சாட்டியுள்ளார். அதற்குப் பிறகும் கிருட்டிணன் பின்வாங்காததால் இந்தப் பிரச்சினையில் நேரடியாக தலையிட்ட அமைச்சர் அன்பழகன், மாவட்டத்திலுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் அழுத்தம் கொடுத்து, கிருட்டிணன் ஏற்கனவே செய்து வந்த சுகாதாரத்துறை  இணை இயக்குனர் அலுவலகக் கட்டுமானப் பணிகளை பாதியில் நிறுத்தி வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமைச்சர் அன்பழகனின் மைத்துனர் பங்கேற்கும் ஒப்பந்தப்புள்ளி நடைமுறையில் மற்ற எவரும் பங்கேற்கக் கூடாது என மிரட்டுவதும், அதை ஏற்க மறுத்தால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் விதிகளின்படி ஒப்பந்தம் பெற்று மேற்கொண்டு வரும் மற்ற கட்டுமானப் பணிகளை மாவட்ட நிர்வாகத்திலுள்ள அதிகாரிகளின் துணையுடன் தடுப்பதும் எந்த வகையில் நியாயம்? இதை எந்த ஜனநாயகம் அனுமதிக்கிறது? என்பது தெரியவில்லை. தம்மை மிரட்டிய செந்தில்குமார் மீது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஒப்பந்ததாரர் கிருட்டிணன்  புகார் அளித்துள்ளார். ஆனால், அதன் மீது இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

இதற்கெல்லாம் மேலாக தருமபுரி மாவட்டத்தில் அனைத்து அரசுத்துறை ஒப்பந்தங்களும் அமைச்சரின் குடும்பம் மற்றும் பினாமிகளுக்குத் தான் வழங்கப்படுகின்றன. அமைச்சரின் மைத்துனர் செந்தில்குமார்,  தனி உதவியாளர் பொன்வேலு ஆகியோர் தான் அனைத்துப் பணிகளையும் பினாமி பெயர்களில் எடுத்து செய்கின்றனர். பொன்வேலுவின் மனைவியை நிர்வாக இயக்குனராகக் கொண்டு சஞ்சனா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு, அதற்கு ஒப்பந்தப் பணிகள் வாரி வழங்கப்படுகின்றன. அவர்களால் செய்ய முடியாத பணிகள் மட்டும், அவற்றின் மொத்த மதிப்பில் 5% கமிஷன் பெறப்பட்டு மற்றவர்களுக்கு  விற்கப்படுகிறது. இதை எதிர்ப்பவர்களுக்கு மிகக் கடுமையான நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன.

 

களப்பிரர்கள், காலக்கேயர்களையும் விஞ்சி மிக மோசமான ஆட்சியை தருமபுரி மாவட்டத்தில் அமைச்சர் அன்பழகனும், அவரது குடும்பத்தினரும் நடத்தி வருகின்றனர் என்பது தான் மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இதற்கு அதிகார வர்க்கமும் துணை போகிறது. இதனால் தருமபுரி மாவட்டம் அனைத்து வகையான வளர்ச்சிக் குறியீடுகளிலும், சட்டம்- ஒழுங்கை பராமரிப்பதிலும் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டிய முதலமைச்சரோ, ‘‘யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்; எனது வழியில் குறுக்கிடாமல் இருந்தால் சரி தான்’’ என்பது போன்ற சந்தர்ப்பவாத அணுகுமுறையைக் கடைபிடித்து வருகிறார். எனவே, இந்த விஷயத்தில் ஆளுனர் தலையிட்டு தருமபுரி மாவட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகனும் அவரது குடும்பத்தினரும் நடத்தி வரும் டெண்டர் ராஜ்யம் குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும். மாநில அரசு அமைப்புகளைக் கொண்டு விசாரணை நடத்தினால் உண்மை வெளிவராது என்பதால், தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஒப்பந்த ஊழல்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.  ’’
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரஜினிகாந்த்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து!

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
 Political party leaders - birthday wishes Rajinikanth

தமிழ்த் திரையுலகில் முடிசூடா மன்னனாக விளங்கும், சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்தின் 73 வது பிறந்ததினம், உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு நபர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தங்களது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். 

 Political party leaders - birthday wishes Rajinikanth

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தனது பதிவில் “அன்பு சகோதரர் “சூப்பர் ஸ்டார்” திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் இறைவன் அருளால் நல்ல உடல் ஆரோக்யத்துடன், நீடூழி வாழ வாழ்த்துகிறேன்” என்றிருக்கிறார்.

Kamal

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் “அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்றும் என்றும் வெற்றிகளை அறுவடை செய்தபடி உற்சாகமாக வாழ மனதார வாழ்த்துகிறேன்” என்றிருக்கிறார்.

A

பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் “தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று 73-ஆவது பிறந்தநாள். அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றிருக்கிறார்.

Seeman

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் “தனது ஒப்பற்ற நடிப்புத்திறனாலும், தனித்துவமிக்க உடல்மொழியாலும், எவரையும் கவர்ந்திழுக்கும் நடை உடை பாவனைகளாலும் எல்லோரது மனதையும் வென்று, உலகப்புகழ் பெற்ற திரையாளுமையாகத் திகழும் தமிழ்த்திரையுலகின் மூத்த திரைக்கலைஞர் பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு அன்புநிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Next Story

“எங்கு வேண்டுமானாலும் கடன் வாங்குங்கள்; கொடுக்கத் தயாராக உள்ளார்கள்” - அன்புமணி

Published on 04/12/2022 | Edited on 04/12/2022

 

“Borrow anywhere; They are ready to give” - Anbumani

 

எங்கு வேண்டுமானாலும் கடன் வாங்குங்கள். சில வங்கிகள் கொடுக்கத் தயாராக உள்ளார்கள். நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

 

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது பேசிய அவர், “தர்மபுரி மாவட்டத்தின் முதன்மை பிரச்சனை ஒகேனக்கல் தர்மபுரி உபரிநீர்த் திட்டம். அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். எங்களுக்கு காரணங்கள் வேண்டாம். தென்பெண்ணையில் ஆண்டுக்கு 5 முறை வெள்ள அபாய எச்சரிக்கை உள்ளது. உபரி நீர் கடலில் கலக்கிறது. அதை இத்திட்டத்தில் சேமிக்க வேண்டும். இதுதான் நீர் மேலாண்மை. அடுத்த 5 ஆண்டுகளில் முதல்வர் 1 லட்சம் கோடியை நீர்மேலாண்மைக்குச் செலவிட வேண்டும். எங்கு வேண்டுமானாலும் வாங்குங்கள். சில வங்கிகள் கொடுக்கத் தயாராக உள்ளார்கள். தமிழகத்தில் இதுபோன்ற நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்” என்றார்

 

மேலும் பேசிய அவர், “2026ல் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்போம். சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்களை 2024 நாடாளுமன்ற தேர்தலில் அமைப்போம். தேர்தலுக்கு 6 மாதம் முன்பு எங்கள் அறிவிப்பு வரும். பார் நடத்துவது அரசாங்க வேலை கிடையாது. அது சட்டத்திற்கு எதிரானது என்று உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். அதை மேல்முறையீடு செய்து ஸ்டே வாங்கியுள்ளனர். எந்த சட்டத்தில் பார் நடத்தலாம் என்ற அதிகாரம் உள்ளது” எனக் கூறினார்.