கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து சிதம்பரம் அருகே அம்மாபேட்டையில் துணை வேளாண்மை விரிவாக்கமையம் செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடம் வலுவிழந்து இருந்ததால் கடந்த 2018-ஆம் ஆண்டு அதே இடத்தில் ரூ 27 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்றது.
![a](http://image.nakkheeran.in/cdn/farfuture/qmhvnQFfUN6QU4gNu7aa7Dw3DXFoepx9RWjFwTzYRgE/1561782805/sites/default/files/inline-images/agri_1.jpg)
பணிகள் முடிந்து வியாழன் அன்று புதிய வேளாண்மை விரிவாக்க மையம் கட்டிடத்தை சிதம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் பாண்டியன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி, குமராட்சி ஒன்றிய வேளாண்மை உதவி இயக்குநர் அமிர்தராஜ், பரங்கிப்பேட்டை உதவி இயக்குநர் விஜயராகவன் உள்ளிட்ட வேளாண்மை துறை அலுவலர்கள், ஊழியர்கள்,விவசாயிகள் கலந்துகொண்டனர்.
குமராட்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வேளாண்மை விரிவாக்கமையத்தை விவசாயிகள் தொழில்நுட்பம், வேளாண்மை இடுபொருட்கள் வழங்கிட ஏதுவாக இந்த மையம் உள்ளது. இந்த அலுவலகத்தை விவசாயிகள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று வேளாண்மை இணைஇயக்குநர் கேட்டுகொண்டார்.