![Ambedkar Memorial Day: Police stop clash](http://image.nakkheeran.in/cdn/farfuture/ou8_yZg1YNkrhKmo3arD-v0wPn3G4o_DUlpPDAeULWY/1638794404/sites/default/files/2021-12/ar-trichy-4.jpg)
![Ambedkar Memorial Day: Police stop clash](http://image.nakkheeran.in/cdn/farfuture/raHgk_TBc-GGF34WGtZmoxm9YHsovyErfRmVGK7Gd8s/1638794404/sites/default/files/2021-12/ar-trichy-3.jpg)
![Ambedkar Memorial Day: Police stop clash](http://image.nakkheeran.in/cdn/farfuture/GlE5ieFUocHiFrtWhjW5gTb1afaklRQ3NurgKuuBOAI/1638794404/sites/default/files/2021-12/ar-trichy-2.jpg)
![Ambedkar Memorial Day: Police stop clash](http://image.nakkheeran.in/cdn/farfuture/-sxuW51R_HzWFB7-ivzrpIY5fjGr1PYxNANvMr6vhV4/1638794404/sites/default/files/2021-12/ar-trichy-1.jpg)
சட்டமேதை அம்பேத்கரின் 65ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பல அரசியல் கட்சியினரும் இன்று காலையில் இருந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சிக்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து ஆதித்தமிழர் பேரவை சார்பாக மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் மாலை அணிவிக்க வந்தனர். அதே நேரத்தில் அவர்கள் மாலை அணிவித்து விட்டு கீழே இறங்கும் போது அகில பாரதிய வித்யார்த்தி பரிசித் அமைப்பினரும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க மேலே ஏறியுள்ளார்கள்.
அப்போது இரு பிரிவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் கைகலப்பாக மாற இருந்தது. அதற்குள்ளாக போலீசார் உடனடியாக இருதரப்பினர் இடையே நடக்க இருந்த மோதலை தடுத்து நிறுத்தினார்கள்.