Published on 16/02/2020 | Edited on 16/02/2020
ஏற்கனவே பதிவேற்றம் செய்தவர்கள் மீண்டும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டுமா? என எழுந்துள்ள நிலையில, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு சான்றிதழ் பதிவேற்றம் தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.
அதில் "கூடுதலாக சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட 27 தேர்வர்கள் மட்டும் தங்களது சான்றிதழ்களின் நகலை இ- சேவை மையங்கள் மூலம் பதிவேற்றினால் போதும். கலந்தாய்வுக்காக பிப்ரவரி 12- ஆம் தேதி வெளியான பட்டியலின் கீழே 47வது பக்கத்தில் 27 தேர்வர்களின் பதிவெண்கள்" உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.