இந்தியாவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 606 லிருந்து 657 ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. 26 பேரில் ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், மதுரையில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை செய்து வருகிறார்.
ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் உள்பட அனைவரும் 'மாஸ்க்' அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.