கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகள் ரம்யா (23), இவர் அதே ஊரிலுள்ள ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த இவர் அருகிலுள்ள விருட்சம்குப்பத்தை சேர்ந்த ராஜசேகர் என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்த நிலையில் பள்ளி வளாகத்திலேயே மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையில் போலீசார் நடத்திய விசாரணையில் ரம்யா கல்லூரி படித்துவந்த பொழுது ராஜசேகர் ரம்யாவை காதலித்துள்ளார். ரம்யாவும் ராஜசேகரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரம்யாவை திருமணம் செய்து கொள்ள அவரது வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார் ராஜசேகர். ஆனால் ரம்யாவின் பெற்றோர் ராஜசேகர் வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் திருமணம் செய்து வைக்க முடியாது என்று கூறி அவரை அவமானப்படுத்தி அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில் கல்லூரி படிப்பை முடித்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்த ரம்யா பெற்றோர்களின் கட்டளை காரணமாக ராஜசேகரனிடம் பேசுவதை நிறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர்தான் ரம்யாவை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்டனர். சிசிடிவி காட்சிகள் இருந்திருந்தால் கொலை செய்த நபர் ராஜசேகர் தானா என்பதை உறுதிப்படுத்தி இருக்கலாம் என்று போலீஸ் தரப்பு விளக்கமளிக்க,
இது தொடர்பாக ராஜசேகரை பிடித்து விசாரிக்கவும் முயன்றது. இந்நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று முந்திரி காட்டில் தனியாக நின்று வந்தது. அந்த பகுதியில் இருந்தவர்கள் திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு நடத்திய விசாரணையில் மோட்டார் சைக்கிளில் நின்ற இடத்திற்கு சற்று தொலைவில் ராஜசேகர் முந்திரி மரத்தில் தூக்கில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதையடுத்து ராஜசேகர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் குறிஞ்சிப்பாடி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு தற்போது கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் செல்ல உள்ளதாக தகவல்.