![AIADMK-TMC second phase talks](http://image.nakkheeran.in/cdn/farfuture/k7bsnsRx9q_1MiFnWAEaJs_TvXyoZ_tiy0W-ZSFN1os/1614848889/sites/default/files/inline-images/nmh_0.jpg)
தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால், தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பிரச்சாரம், கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் தேதிகள் தாமதமாக அறிவிக்கப்படும் என அரசியல் கட்சிகள் நினைத்திருந்த நிலையில், தேர்தல் தேதி முன்னதாகவே அறிவிக்கப்பட்டதால் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம், வேட்பாளர் பட்டியல், வேட்புமனுத்தாக்கல் போன்ற விஷயங்களில் அரசியல் கட்சிகள் மும்மரமாக இயங்கி வருகின்றன.
அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுகவிடம் நேற்று (03.03.2021) முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சைக்கிள் சின்னத்தில் போட்டியிட 12 தொகுதிகளைக் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்போது அதிமுக - தமாகா இடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் துவங்கியுள்ளது.