மின் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சென்னை பட்டாளம் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது பேசிய அவர், “அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது, ஓபிஎஸ் கோஷ்டியால் இதை பண்ண முடியுமா. அண்ணா பிறந்த நாளுக்கு கூட்டம் ஏதும் நடத்தியதா. ஏனெனில் அவர்களிடம் ஆள் இல்லை” எனக் கூறினார்.
கல்லுப்பட்டியில் நடந்த கூட்டத்தில் பேசிய ஆர்.பி. உதயகுமார் தன் நண்பரும் உசிலம்பட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஐய்யப்பனை காணவில்லை என கூறினார். கூட்டத்தில் பேசிய அவர், “நீங்க கூட கேக்கலாம். என்ன உதயகுமார் உங்க கூட குண்டா ஒருத்தர் இருப்பாரே அவர காணோம்னு. அவரையும் தூக்கிட்டு போய்ட்டாங்க. தேடிட்டு இருக்கோம்.சின்ன கொழந்த எல்லாம் திருவிழால, பாடுபட்டு பெத்த தாயி தகப்பன விட்டுட்டு பஞ்சு மிட்டாய் காரன் பின்னாடி போகும். போலீஸ் கிட்ட போயி என்ன கடத்திட்டு வந்துட்டாங்கனு சொல்லும். கொஞ்ச நேரத்துல போலீஸ் காரங்க மைக்ல கூப்டுவாங்க. அதே மாதிரி தான் இங்கயும் எடப்பாடி எங்கு இருந்தாலும் கவனிங்க உங்ககிட்ட இருந்து காணாம போன உங்க புள்ள உசிலம்பட்டியில இருந்து வர தயாரா இருக்குனு கூப்புடுவாங்க. அந்த புள்ள அடுத்த பொதுக்கூட்டத்துக்குள்ள பெத்தவங்கள தேடி வரலாம்” என கூறினார்.