Skip to main content

சிதம்பரம் அருகே ரூ 42.79 கோடி தடுபணை பணியை ஆய்வு செய்த வேளாண் செயலர் ககன்தீப்சிங்பேடி

Published on 23/10/2020 | Edited on 23/10/2020

 

 

Agriculture Secretary Kagandeep Singh Bedi inspects


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பெராம்பட்டு கிராமத்தில் ரூ 42.79 கோடி  செலவில் தடுப்பணை பணிகள் நடைபெற்று வருகிறது.  இந்த பணிகளை தமிழக அரசின் முதன்மை செயலாளரும் வேளாண்துறை செயலாளருமான ககன்தீப் சிங்பேடி இன்று ஆய்வு செய்தார்.

 

பின்னர் பணியின் விவரம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.  வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் பணியை முடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

 

இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன், கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி, கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்கார,  சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன், விருதாச்சலம் சார் ஆட்சியர் பிரவீன் குமார், சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ் உள்ளிட்ட வருவாய் துறை மற்றும் பொதுப்பணித் துறையினர் உடனிருந்தனர். இதனைத்தொடர்ந்து திட்டு காட்டூர் கிராமத்தை இணைக்கும் ரூ.19 கோடியில் கட்டப்பட்டுவரும் உயர்மட்ட மேம்பால பணியை ஆய்வு செய்தார். பின்னர் கீழே குண்டலபட்டி கிராமத்தில் புயல் பாதுகாப்பு மையத்தை ஆய்வு செய்து அப்பகுதியில் அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்