ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், ஆம்பூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் போட்டியிடுவதற்காக அதிமுகவில் 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அவர்களிடம் நேர்காணல் நடத்தி முடித்து மார்ச் 17-ம் தேதி இரவு அதிமுக சார்பில் மாதனூர் ஒன்றிய கழக செயலாளர் ஜோதி ராமலிங்க ராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
![admk](http://image.nakkheeran.in/cdn/farfuture/F8LpMEBPoMcGexcpnDf1Z3vF9cm3rzMahvNsIqGfoPk/1552925680/sites/default/files/inline-images/admk-candidat-in.jpg)
இந்த அறிவிப்பால் விருப்பமனு தாக்கல் செய்த 10-க்கும் மேற்பட்டோர் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதில் ஆம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு அளித்திருந்தார் ஆம்பூர் நகரக் கழகச் செயலாளர் மதியழகன். தனக்கு சிட் கிடைக்கவில்லை என்றதும் கோபமாகிவிட்டார். இந்நிலையில் நகரக் கழகச் செயலாளரை பார்ப்பதற்காக வேட்பாளர் ஜோதி ராமலிங்க ராஜா ஆம்பூர் வந்துள்ளார், வந்தவர் கட்சி அலுவலகத்தில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கிறார். நகரக் கழகச் செயலாளர் செல்போன் அனைத்து வைக்கப்பட்டுள்ளதால், அவரை பிடிக்க முடியவில்லை. இதனால் வேட்பாளர் அலுவலகத்தில் காத்திருக்கிறார். இது வேட்பாளரை அதிர்ச்சியடையவைத்துள்ளது.