நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 95 ஆயிரத்து 377 வாக்குகள் பெற்று 33 ஆயிரத்து 445 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரி நடேசன் வழங்கினார்.
நெல்லை நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தலுக்கு 299 வாக்கு சாவடிகளில் பதிவான வாக்குபதிவு இயந்திரங்கள் பாளையாங்கோட்டை அரசு பொறியியல் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கபட்டு இருந்தன. இன்று காலை வேட்பாளர்களின் முகவர்கள் முன்பாக சீல் உடைக்கபட்டு 8-45 மணிக்கு வாக்கு எண்ணும் பணி துவங்கியது.முதல் சுற்று முதலே அதிமுக வேட்பாளர் நாராயணன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை விட அதிகம் வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வந்தார்.
22 வது சுற்று முடிவில் நாராயணன் 95 ஆயிரத்து 377 வாக்குகள் பெற்று 33 ஆயிரத்து 445 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ரூபி மனோகரன் 61 ஆயிரத்து 932 வாக்குகளும் சுயேட்சை வேட்பாளர் ஹரிநாடார் 4 ஆயிரத்தி 243 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜநாராயணன் 3 ஆயிரத்தி 494 வாக்குகளும் பெற்றனர். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை நாராயணனிடம் தேர்தல் நடத்தும் அலுவலர் நடேசன் வழங்கினார். அதிமுக,காங்கிரஸ் வேட்பாளர்களை தவிர அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.