கரோனா வைரஸ் பாதிப்பினால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். அதுவும் திரைப்பிரபலங்கள் எல்லோரும் வீட்டிலே முடங்கி அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் நடிகர் விமல் ஒரு படி மேலே போய் சொந்தவூரில் தெருக்களில் இறங்கி கிருமிநாசினி மருத்து அடித்து ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
![actor vimal in corona prevention action](http://image.nakkheeran.in/cdn/farfuture/jaaekRueov5MPP0BO6Ghwp86MNgRMOCYOaLqKZ9uJFg/1585459208/sites/default/files/inline-images/vnnnnbnbnbn.jpg)
திருச்சி மாவட்டம், மாணப்பாறை அருகே உள்ள பன்னாங்கொம்பு கிராமத்தை சேர்ந்தவர் நடிகர் விமல். தன்னுடைய கிராமத்தில் உள்ள கிழக்கு தெரு நடுத்தெரு, ஆகிய குடியிருப்பு பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக அந்த பகுதி இளைஞர்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன் திரைப்பட நடிகர் விமல் கருமிநாசினி மருத்து அடித்தார். நடிகர் விமலின் இந்த முயற்சிக்கு அந்த பகுி மக்கள் பாராட்டு தெரிவித்தனர். ஏற்கனவே அந்த ஏரியா பகுதியில் நடக்கும் பொதுபிரச்சனைளுக்கும், மக்களின் தேவைகளுக்கும் தன்னால் ஆன உதவிகளை அவர் செய்துவருவது குறிப்பிடதக்கது.