சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் "தர்பார்" திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு தளத்தில் மாணவர்கள் கற்களை வீசியதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. "தர்பார்" திரைப்படத்தின் காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கல்லூரி ஒன்றில் இந்த திரைப்பட காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்த திரைப்படத்தில் போலீஸ் வேடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து வருகிறார். முதன் முறையாக ஏ.ஆர். முருகதாசும் ரஜினிகாந்தும் இணைந்திருப்பது படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
![RAJINI DARBHAR FLIM](/modules/blazyloading/images/loader.png)
இந்நிலையில் மும்பை கல்லூரி ஒன்றில் படப்பிடிப்பு நடைப்பெற்றுக் கொண்டிருந்த போது , அதனை அங்கிருந்த மாணவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்த பாதுகாவலர்கள் மாணவர்களை வெளியேற்றியதாக தெரிகிறது. மேலும் , சமந்தப்பட்ட மாணவர்கள் மீது ஏ.ஆர் . முருகதாஸ் தரப்பில் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் படப்பிடிப்பு தளத்தில் மீது கற்களை வீசி எறிந்துள்ளனர்.இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் ரஜினி உள்ளிட்டோர் அழைத்து செல்லப்பட்டனர். கடைசியாக 1992-ல் ரஜினி போலீஸ் வேடத்தில் "பாண்டியன்" திரைப்படத்தில் நடித்திருந்தார். 25 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸ் வேடத்தில் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.