Skip to main content
Breaking News
Breaking

பிகில் படத்தில் விஜய் அணிந்து வரும் உடை குறித்து எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து! 

Published on 22/10/2019 | Edited on 22/10/2019

பிகில் படம் தீபாவளிக்கு பண்டிகையை முன்னிட்டு வருகிற 25ஆம் தேதி படம் ரிலீஸ் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படம் சுமார் ரூ.180 கோடி வரை பெரும் பொருட்செலவு செய்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அட்லி, விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் பிகில். மேலும் விஜய் பிகில் படத்தில் வரும் தோற்றத்தை கருப்பு சட்டை, காவி கலர் வேஷ்டி, கழுத்தில் சிலுவை என வித்தியாசமாக வடிவமைத்துள்ளார் அட்லீ. இதே போல உடைகளை வடிவமைத்து விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளனர். முதல் நாள் முதல் காட்சி 'பிகில்' படத்துக்குப் போகும்போது, இந்த உடையில் செல்லலாம் என்று பலரும் வாங்கி வருகிறார்கள். இது குறித்து எஸ்.வி.சேகரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
 

sekar

 


பின்பு இதற்கு பதிலளித்த நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி. சேகர், இந்த படத்தில் விஜய் அணிந்து வரும் உடை குறித்து  தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  "இதைப் பெரிதுபடுத்துவது சரியல்ல என்பது என் கருத்து. விஜய் ஒரு நல்ல நடிகர். அவரது ரசிகர்களுக்காக விற்கப்படும் பொருட்கள். இதில் காவி வேட்டி, ருத்திராட்சம் கூட இருக்கின்றதே. இதை விற்கும் கடைக்காரர்கள் அனைவரும் மாற்று மதத்தினரா? விஜய் விபூதி பூசி நடிக்கும்போது பிடிக்கும் நமக்கு, அவர் சிலுவை அணியும்போது பிடிக்காதது சரியல்ல. அவர் எங்காவது பொது வெளியில் தன் மதத்தை மட்டும் உயர்வாகப் பேசி மற்ற மதத்தைத் தாழ்வாகப் பேசி பார்த்துள்ளீரா. வேற்றுமையில் ஒற்றுமை” என்று தெரிவித்துள்ளார் எஸ்.வி.சேகர்.

 

சார்ந்த செய்திகள்