Skip to main content

விநாயகர் சதுர்த்தி ஊர்வல முடிவில் விபத்து - உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அமைச்சர்கள் ஆறுதல்

Published on 01/09/2022 | Edited on 01/09/2022

 

Accident at the end of Ganesha Chaturthi procession! -Ministers condole the families of the victims!

 

ராஜபாளையம் அருகே 31-ஆம் தேதி இரவு நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் முடிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களை தமிழக அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி  நிதியுதவி வழங்கியுள்ளனர்.  

 

Accident at the end of Ganesha Chaturthi procession! -Ministers condole the families of the victims!

ராஜபாளையம் அருகே சொக்கனாமுத்தூர் பகுதியில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இரவு நேரத்தில் நடந்தது. விரைவில் ஊர்வலம் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, சிலைகளை கொண்டுசென்ற சப்பரங்கள் இரவு ஊருக்குள் திரும்பி வந்தன. அப்போது, சிலையை இறக்கிவிட்டு வந்த ஒரு சப்பரம் தென்காசி  மாவட்ட எல்லையில் அமைந்துள்ள பகுதியில், டிரான்ஸ்பார்மரில் உள்ள மின்வயரில் எதிர்பாராத விதமாக சிக்கி விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில்  முனீஸ்வரன், மாரிமுத்து, சேவுகபாண்டியன், செல்லப்பாண்டியன், முப்பிடாதி ஆகிய ஐவரும் காயமடைந்தனர். இவர்களில் முனீஸ்வரன் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

 

Accident at the end of Ganesha Chaturthi procession! -Ministers condole the families of the victims!

 

இந்நிலையில், தென்காசி மாவட்டம்-சிவகிரி அரசு மருத்துவமனைக்கு சென்ற தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாத ரெட்டி ஆகியோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நிதியுதவி வழங்கினர். விபத்தில் இறந்த  இருவரது உடல்களுக்கும்  மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினார்.

 

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதால், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திப்பதாக, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்