Skip to main content

ஒரே கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் கார்விபத்தில் பலி! முதல்வர் நிதியுதவி அறிவிப்பு!

Published on 06/03/2020 | Edited on 06/03/2020
a

 

கர்நாடகாவில் தும்கூர் மாவட்டம் குனிகல் அருகே நடந்த சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.  இதில், 10 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.  

 

ஓசூர் அருகே உள்ள சீக்கணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த14 பேர் கர்நாடகாவில் உள்ள தர்மஸ்தாலா கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு திரும்பி வந்தபோது எதிரே வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புகளை கடந்து வந்து இவர்கள் வந்த கார் மீது பயங்கரமாக மோதியது.  இந்த பயங்கர விபத்தில் சவுந்தர்ராஜ்(48), திருஷ்ணூ(14), மஞ்சுநாத்(35), தனுஜா(26), ரத்தினம்மா(60), மாலாஸ்ரீ(4), ஷோத்தன்(1), சரளா(32), ராஜேந்திரா(27), கவுரம்மா(55) ஆகிய 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  சுவேதா, அன்சுயா, மாலா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்து தும்கூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  எதிரே வந்த காரில் வந்த 3 பேர் உயிரிழந்தனர்.

 

a


ஒரே கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் கார் விபத்தில் உயிரிழ்ந்ததால் சீக்கனப்பள்ளி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

 

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒருலட்ச ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிதி உதவி அளித்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்