Skip to main content

‘மக்கள் வேலை செய்யத் தயாராக இல்லை’ - இலவசங்களை விமர்சித்த உச்சநீதிமன்றம்!

Published on 12/02/2025 | Edited on 12/02/2025

 

Supreme Court criticizes freebies

நகர்ப்புறங்களில் வீடற்ற நபர்களின் தங்குமிடம் உரிமை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘துர்திஷ்டவசமாக, இந்த இலவசங்களால் மக்கள் வேலை செய்ய தயாராக இல்லை. அவர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் கிடைக்கின்றன. அவர்கள் எந்த வேலையும் செய்யாமல் பணத்தைப் பெறுகிறார்கள். அவர்களை சமூகத்தின் முக்கிய நீரோட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றி நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க அனுமதிக்க வேண்டும்’ என்று கூறினர்.

இதையடுத்து மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர் வெங்கடரமணி கூறியதாவது,  ‘நகர்ப்புற வறுமை ஒழிப்புப் பணியை இறுதி செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இது நகர்ப்புறங்களில் வீடற்றவர்களுக்கு தங்குமிடம் வழங்குவது உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்’ என்று தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து, நீதிபதிகள் தெரிவித்ததாவது, ‘நகர்ப்புற வறுமை ஒழிப்பு பணி எவ்வளவு காலத்திற்குள் நடைமுறைக்கு வரும் என்பதை மத்திய அரசிடமிருந்து சரிபார்க்குமாறு’ கூறி இந்த வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

சார்ந்த செய்திகள்