Published on 17/05/2023 | Edited on 17/05/2023
![An absconding liquor dealer arrested!](http://image.nakkheeran.in/cdn/farfuture/aknGKA21BvMooLxHyetESaq262VJJgJU589xZ6_XM8Y/1684340559/sites/default/files/inline-images/th_4175.jpg)
கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்தும் வகையில் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் அணைக்கட்டு அடுத்த மூலைகேட்டு அருகே உள்ள மலையடிவாரத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலர்கள் மேற்கொண்ட சோதனையில் மேல் வாழைப்பந்தல் பகுதியைச் சேர்ந்த ராஜாமணி(45) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 17 டியூப்களிலிருந்து 500 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து அழித்துள்ளனர்.
இவர் மீது ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தலைமறைவாக இருந்து தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யவும் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.