Skip to main content

6 பேரை பலி கொண்ட காவிரியில் டைவ் அடித்த 8 பேர் கைது!

Published on 14/08/2018 | Edited on 14/08/2018
K_NT_ (2)


மேட்டூரில் இருந்து உபரி நீர் வர ஆரம்பித்ததில் இருந்து திருச்சியில் மொத்தம் 6 பேர் தண்ணீரில் அடித்து சென்று இறந்திருக்கிறார்கள். எனவே திருச்சியில் முக்கிய கரைகள் எல்லாம் மூடப்பட்டது. இந்த இடங்களில் எல்லாம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. குறிப்பாக முக்கொம்பு, கல்லணை, காவிரி கரையின் இரண்டு பக்கங்களில் உள்ள படித்துறைகள் எல்லாம் மூடப்பட்டது. இதே போல கொள்ளிடக்கரையில் உள்ள படித்துறைகளும் மூடப்பட்டது.

ஆற்றில் நீரின் இழுப்பு தன்மை அதிகரித்து வருவதால் உயிர் பலி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் தடுப்பு கம்பிகள் போடப்பட்ட இடங்களில் மட்டுமே குளிக்க வேண்டும் என்றும், செல்பி எடுக்கவோ அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ராசமணி எச்சரிக்கை விடுத்தார்.
 

K_NT_ (2)


இந்த நிலையில் சில இளைஞர்கள் தடுப்புகம்பிகள் மீது ஏறி ஆற்றில் குதித்து நீச்சல் அடித்து விளையாட ஆரம்பித்தனர். இப்படி போலீஸ் மற்றும் மாவட்ட நிர்வாகம் கொடுத்த அறிவிப்பை மீறி மாணவர்கள் ஏறி குதித்து குளித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய சொல்லி மாநகர கமிஷர் அமுல்ராஜ் உத்தரவிட்டார்.

இதனால் கோட்டை காவல்நிலையத்திற்கு உட்பட்ட எல்லைக்கு தில்லைநாயகம் படித்துறை, கருமாதிபடித்துறை, ஓடத்துறை, ஆகிய பகுதிகளில் டைவ்அடித்து விளையாடிக்கொண்டிருந்த கார்த்தி, நசீர்அகமது, பாண்டித்துறை, ஆனந்தன், பிரவீன், மோகன்ராஜ், ஆதீஸ்வரன் ஆகியோர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.

சார்ந்த செய்திகள்