![65 kg plastic in stomach of cow in Madurai](http://image.nakkheeran.in/cdn/farfuture/OLRTAVzubL16omkIR-uL2QQnrSVIam0ceI1T6TohvOw/1670002782/sites/default/files/inline-images/5_80.jpg)
பசுமாட்டின் வயிற்றில் 65 கிலோ ப்ளாஸ்டிக் கழிவுகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை வடக்கு மாசி வீதியில் வசித்து வரும் பரமேஸ்வரனுக்கு சொந்தமாக கிர் இன பசு மாடு உள்ளது. அது கர்ப்பமாக இருந்ததுள்ளது. எனினும் கன்றை ஈன்ற பிறகும் வயிறு பெரிதாகவே இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தல்லாகுளம் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.
மருத்துவர்கள் பசுமாட்டின் வயிற்றினை ஸ்கேன் செய்தபோது அதில் எண்ணற்ற ப்ளாஸ்டிக் கழிவுகள் இருந்துள்ளன. பசுவின் வயிற்றுக்குள் இருந்து சுமார் 65 கிலோ அளவிலான சாக்குப்பைகள், ப்ளாஸ்டிக் குப்பைகள், துணிகள் போன்றவை அகற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மருத்துவர்கள் பேசுகையில், “பசு மாட்டினை எக்ஸ்ரே எடுத்து பார்த்தபொழுது அதில் பல கழிவுகள் இருந்தது தெரிந்தது. அறுவை சிகிச்சையின் மூலம் வயிற்றிலிருந்த கழிவுகளை அகற்றினோம். 4 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையில் 65 கிலோ அளவு கொண்ட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. தற்போது பசு நலமாக உள்ளது. தீவனம் நல்லபடியாக எடுத்துக்கொள்கிறது” என்றார்.