தமிழக வரைவு வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ வெளியிட்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தோராயமாக 6 கோடியே 11 லட்சம் வாக்களர்கள் தமிழகத்தில் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் தோராயமாக 3 கோடி பேர் உள்ளனர். பெண் வாக்களர்கள் 3 கோடியே 10 லட்சம் பேர் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 8 ஆயிரத்து 16 பேர் உள்ளனர்.
புதிய வாக்காளர்கள் தங்களுடைய பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். விடுபட்ட வாக்களர்களின் பெயர்களை படிவம் 6 மூலம் சேர்க்க வேண்டும். முகவரி மாற்றம் செய்ய வேண்டும் எனில் படிவம் 8 மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதன் மூலம் வாக்காளர் பட்டியலில் இன்று முதல் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் இதற்கான இறுதி வாக்காளர் பட்டியல் 05.01.2024 அன்று வெளியிடப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
04.11.2023, 05.11.2023, 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய 4 நாட்களில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நடைபெறும். இதையடுத்து 05.01.2024 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 6 லட்சத்து 52 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் ஒரு லட்சத்து 69 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்” என தெரிவித்தார்.