Skip to main content

பெண்ணாடம் அருகே 5 வயது சிறுவன் ஏரியில் மூழ்கி இறப்பு!

Published on 08/01/2019 | Edited on 08/01/2019
cuddlore

 

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகில் உள்ள வடகரை கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து. ரயில்வே ஊழியரான இவரின் 5 வயது மகனான  இளமாறன் வேப்பூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான். இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று மாலை 5:30 மணியளவில் சக நண்பர்களுடன் விளையாடச் சென்றான். பல மணி நேரமாகியும் வீட்டிற்கு வராததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வீரமுத்து மற்றும் அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

 

பின்னர் இரவு 9:30 மணியளவில் அருகிலுள்ள ஏரிக்கு சென்று பார்த்தபோது, இளமாறன் இறந்த நிலையில் மிதந்து கிடப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, பெண்ணாடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏரியில் மூழ்கி எல்.கே.ஜி., மாணவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்